அதிமுக கட்சி ஆளும் கட்சியா ? இந்த தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது… செஞ்சி பிரச்சாரத்தில் அதிமுகவை வைத்துசெய்த ஸ்டாலின்

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக எதிர்க்கட்சியாக கூட உட்கார முடியாது என்று செஞ்சி பிரச்சாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செஞ்சி :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.

இந்தநிலையில், திண்டிவனம், மைலம், செஞ்சி ஆகிய தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் செஞ்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது; சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று திமுக சார்பில் நான் கேள்வி எழுப்பியபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கொரோனா வராது என்று நக்கலாக பதிலளித்தார். இப்பொழுது புரிந்துகொள்ளுங்கள் மக்களை பற்றி கவலை படாத அரசு தான் அதிமுக அரசு என்றார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செஞ்சி கோட்டை பன்னாட்டு சுற்றுலா மையமாக மாற்றப்படும். மேலும்,
விவசாயிகளுக்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்கப்படும் என்றும், விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

Read more – அரசியலிலும் நடைபயிலும் நடிகை சகிலா : தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் கிடைத்த உயர்பதவி

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், 200 தொகுதிகளில் இல்லை தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெற போகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த தேர்தலுக்கு பிறகு அதிமுக எதிர்க்கட்சியாக கூட உட்கார முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version