நான் மேயராக இருந்தபோது சிங்கார சென்னையாக இருந்த சென்னையை அதிமுக ஆட்சியில் சீரழிந்து போய்விட்டது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் முதல்வர் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக சென்னையில் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்பொழுது அவர், திமுக தலைவர் முக ஸ்டாலின் 2 முறை சென்னையில் மேயராக இருந்தபோது என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, சென்னை மயிலாப்பூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டபோது முதல்வரின் கேள்விக்கு பதிலளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது ;
Read more – ஸ்டாலினுக்கு உதய்யை நினைத்து கவலை… தமிழகத்தை நினைத்து அல்ல… பிரச்சாரத்தில் அமித்ஷா அதிரடி
நான் 2 முறை மேயராக இருந்துபோது சென்னைக்கு சென்னை மக்களுக்கும் என்னென்ன பணிகளை செய்தேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். நான் மேயராக இருந்தபோது சிங்கார சென்னையாக இருந்த சென்னையை அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் சீரழித்து விட்டது. இது தான் அதிமுகவின் சிறந்த ஆட்சி என்று தெரிவித்தார்.