தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை.. இதில் எங்கிருந்து வெற்றி நடை.. உதயநிதி கேள்வி

காவல்துறையில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத தமிழகம் எப்படி வெற்றி நடை போடும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காட்பாடி :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், வேலூர் காட்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகனுக்கு உதயநிதி ஸ்டாலின் ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர்,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. அந்த அம்மாவின் உறவினரான தீபா, விவேக் போன்றவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. மருத்துவமனையில் சிசிடிவி வேலை செய்யவில்லை. கடைசி வரை அந்த அம்மாவிற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஒரு முதல்வருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு நினைத்து பாருங்கள்.

Read more – ஒரு சிலிண்டர் விலை 5000 ரூபாயா ? போடு தகிட தகிட… திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சர்ச்சை பேச்சு..

காவல் துறையில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலமான தமிழகம் எவ்வாறு வெற்றி நடை போடும். உங்கள் தொகுதியில் வேட்பாளராக நிற்கும் துரைமுருகனை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version