வேணா தம்பி ராங்கு.. மக்கள் நீதி மய்யம் வேற மாதிரி கேங்கு.. கமல்ஹாசனின் பயமறியா பேச்சு..

எல்லாரிடமும் ரெய்டு நடத்தி அச்சுறுத்துவது போல் என்னை அச்சுறுத்த நினைக்காதீர்கள் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து நேற்று கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர் கூறியதாவது;

ஊழலுக்கு மாற்றாக மற்றொரு ஊழலை தேர்வு செய்யாதீர்கள். மாறி மாறி பொய் பேசி ஐம்பது ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் தமிழகத்தை கெடுத்து விட்டார்கள். அரசுக்கு எதிராக யாராவது குரல் கொடுத்தால் அவர்களது வீட்டில் உடனே ரெய்டு பாய்ந்து விடுகிறது. அந்த வேலையை என்னிடம் காட்ட நினைக்காதீர்கள் என்றார்.

Read more – மக்கள் நீதி மய்யத்தின் வேளச்சேரி தொகுதி வேட்பாளருக்கு கொரோனா தொற்றா ?

மேலும், திமுக ஆட்சியில் செய்ததை எல்லாம் நாங்கள் செய்யவில்லை இவர்கள் தான் செய்தார்கள் என பொய் பிரசாரம் செய்கிறார்கள். இரு தரப்பும் மாறி மாறி பொய் பேசுகிறார்கள். இவர்களின் ஆட்சியில் தொடர்ந்து பல வாயில்லா ஜீவன்கள் தொடர்ந்து மடிந்து போகிறது. மாற்றம் கொண்டு வாருங்கள், அது மக்கள் நீதி மய்யமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version