இலவச திட்டங்களை வழங்கும் இரு கட்சிகள்… தமிழகம் கடனில் தத்தளிக்க இவர்களே சாட்சிகள்… திராவிட கட்சிகளை வெளுத்துவாங்கிய டிடிவி

இலவச திட்டங்களை வழங்கி தமிழகத்தை கடனாளியானதுக்கு அதிமுக திமுக கட்சிகளே காரணம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி :

வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் என்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், நெய்வேலியில் நடந்த அமமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது; இருகட்சிகளும் போட்டி போட்டு இலவச வாக்குறுதிகளை வழங்கியதால் தான் தமிழகம் மிகப்பெரிய அளவில் கடனின் தத்தளித்து வருகிறது. இலவச வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வர அதிமுக- திமுக இருகட்சிகளும் ஏமாற்றி ஆட்சிக்கு வர முனைகிறது.

Read more – திருவண்ணாமலையில் நிர்வாணமாக வேட்புமனு அளித்த விவசாயிகள்…

ஆனால், அமமுக தேர்தல் அறிக்கையில் மட்டும் தான் தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு திட்டங்கள் அரங்கேறியுள்ளது என்று இரு திராவிட கட்சிகளை குற்றம் சாட்டி டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார்.

Exit mobile version