அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைத்தால் எடப்பாடி, ஸ்டாலின் பாஸ் ஆவார்களா ? சீமான் கேள்வி

அரசியல்வாதிகளுக்கு தகுதி தேர்வு வைத்தால் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் பாஸ் ஆவார்களா என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.

அதேபோல், நடிகர் கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது.

Read more – திமுகவில் உழைப்பால் உயர்ந்தவன் இந்த ஸ்டாலின்.. தகுதி இல்லாமல் வரவில்லை… மு.க.ஸ்டாலின்

இந்தநிலையில், தமிழகத்தில் அரசியல் வாதிகளை தேர்வு வைத்து தேர்ந்தெடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேர்வு வைத்து அரசியல் வாதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமிழக அமைச்சர்கள் பாஸ் ஆவார்களா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி பாஸ் ஆக முடியுமா? ஸ்டாலின் பார்த்து எழுதியாவது பாஸ் ஆவாரா என கிண்டல் அடித்து பிரச்சாரம் செய்துள்ளார்.

Exit mobile version