முதல்வர் போட்டியில் தனக்கு தானே ஓட்டளித்த ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி…

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் போட்டியில் தனக்கு தானே ஓட்டளித்த பாக்கியம் பெற்ற ஒரே நபராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.

எடப்பாடி :

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, திமுக சார்பில் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், அமமுக சார்பில் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் 5 முனை முதல்வர் போட்டியாளர்களாக களம் கண்டனர்.

இந்தநிலையில், கோவில்பட்டியில் போட்டியிடும் டிடிவி தினகரன் சென்னை அடையாறு வாக்குச்சாவடியிலும், கோவை தெற்கில் போட்டியிடும் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியிலும், திருவொற்றியூரில் போட்டியிடும் சீமான் விருகம்பாக்கம் தொகுதியிலும், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் தேனாம் பேட்டை தொகுதிகளிலும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

Read more – நாட்டுக்கு வாக்குகளாக முக்கியம்… கர்ணன் ‘ஷோ’க்கு டிக்கெட் தான் முக்கியம்.. திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்

ஆனால், தற்போது முதல்வராக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி மட்டுமே எடப்பாடி தொகுதியில் தனக்கு தானே தனது வாக்கினை பதிவு செய்து பாக்கியம் பெற்ற ஒரே நபராக திகழ்கிறார்.

Exit mobile version