நான் செய்வதையே ஸ்டாலின் சொல்கிறார் என்று போரூர் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
போரூர் :
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளநிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க அனைத்து அரசியல் கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காலை 9 மணியளவில் போரூரில் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக
‘நான் சொல்வதையே முதல்வர் செய்கிறார், என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான் செய்வதைத் தான் ஸ்டாலின் சொல்கிறார். கடைசி வரை தி.மு.க சொல்லிக்கொண்டே தான் இருக்கப்போகிறது. செய்யும் இடத்தில் அதிமுக இருக்கப்போகிறது என்று தெரிவித்தார்.
Read more – கிணற்றில் இருந்து வெளியேறும் எரிவாயு : புத்திசாலித்தனமாக வீட்டு சமயலறையில் எரிவாயுவை உபயோகிக்கும் பெண்
விவசாயிகள் படும் சிரமங்கள் என்ன என்பது எனக்கு தெரியும் என்பதால் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவதுதான் அதிமுக அரசு’ என்று தெரிவித்துள்ளார்.