வேல் யாத்திரை தொடந்து நடக்க.. பா.ஜ.க வெற்றியுடன் கோட்டையில் இடத்தை பிடிக்க… மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

வேல் யாத்திரையால் தமிழகத்தில் மிக பெரிய அரசியல் மாற்றம் வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை :

சென்னையில் நேற்று (பிப்.19) நடைபெற்ற வணிகர்கள் மற்றும் தொழிலதிபர் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்பொழுது பேசிய அவர், பொய் பிரச்சாரம் செய்து அரசியல் செய்யும் சூழ்நிலை தான் இப்பொழுது நடைமுறையும் உள்ளது. தமிழகத்திற்கு நல்லாட்சி கிடைக்க வேண்டும். வேல்யாத்திரையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் கோயிலுக்கே செல்லாதவர்கள் தற்போது கோயிலுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணியால் எதிர்க்கட்சிகளுக்கு ஒருவித பயம் வந்துவிட்டது. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.பி. கூட இல்லாதபோதும் குறை வைக்காமல் செயலாற்றி வருகிறார் பிரதமர். தமிழகத்தை பிரதமர் மோடி புறக்கணிக்கவில்லை என்று தெரிவித்தார்.

Read more – இன்றைய ராசிபலன் 20.02.2021!!!

அதனை தொடர்ந்து, இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழர்களை மீட்டவர் பிரதமர் என்றும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருந்தவர்கள் தான் தற்போது மோடி அரசைக் குறைகூறுகின்றனர் என்று கூறிய அவர், நாங்கள் இடையூறு அரசியல் செய்பவர்கள் அல்ல; தமிழகம் வளர்ச்சியடைய வேண்டும் என்றே உழைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version