மாத்தி சொல்லாதீங்க ராஜா … நானே பேசிக்குறேன்… ஹெச். ராஜாவை மேடையில் கலாய்த்த அமித்ஷா

அமித்ஷா பேசிய இந்தியை தவறாக தமிழில் மொழிபெயர்த்த ஹெச். ராஜாவால் அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

விழுப்புரம் :

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்த நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தங்களது ஆதரவு கட்சிக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், நேற்று விழுப்புரத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் அமித்ஷா ஹிந்தியில் உரையாற்றினார்.அதனை ஹெச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார். அப்போது 2 ஜி, 3 ஜி, 4 ஜி ஆகியவை தமிழகத்தில் உள்ளன. 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் இரண்டு தலைமுறைகள், 3 ஜி என்றால் கருணாநிதி குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் என்றும் 4 ஜி என்றால் காந்தி குடும்பத்தின் நான்கு தலைமுறைகள் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

Read more – தேர்தலில் தபால் ஓட்டு யாருக்கு ? ஆணையை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..

அப்பொழுது, ராஜா தவறாக உளறிக்கொண்டே மாற்றி மாற்றி சொல்ல அமித் ஷா அதை உணர்ந்து கொண்டு சுட்டிக்காட்டினார். இருந்தும், ராஜா மீண்டும் தவறாகவே மொழிபெயர்க்க நீங்கள் மீண்டும் தவறாக மொழி பெயர்க்கிறீர்கள். இதை நானே சொல்லி கொள்கிறேன் என்று அமித்ஷா தெரிவிக்க அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

இதுபோல் கடந்த 2018 ம் ஆண்டு தமிழகம் வந்த அமித் ஷா, சொட்டு நீர் பாசனத் திட்டங்கள் என்று பேசியதை ராஜா ‘சிறுநீர் பாசனம்’ என்று மொழிபெயர்த்தது இன்றுவரை நினைவில் இருந்து மாறாத ஒன்றாகவே இருக்கிறது.

Exit mobile version