என்னை வெற்றி பெற செய்தால் விருத்தாசலத்தை தனிமாவட்டமாக மாற்றுவேன் : பிரேமலதா விஜயகாந்த் வாக்குறுதி

என்னை வெற்றி பெற செய்தால் விருத்தாசலத்தை தனிமாவட்டமாக மாற்றுவேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் என்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 19 ம் தேதி விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து, அமமுக கூட்டணியில் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது தேர்தலில் வெற்றிபெற்றால் விருதாச்சலத்தை தனி மாவட்டமாக மாற்றுவேன் என்று உறுதியளித்தார்.

Read more – வேட்பு மனு வாபஸ் பெற இன்றே கடைசி நாள் : வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது

ஏற்கனவே தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த 2006 ல் விருத்தாசலம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதேபோல், 2011 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் 2011 ல் தேமுதிக சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளரும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version