நாட்டில் மழை தண்ணி இல்லாம பஞ்சம், பட்டினி…. 17 நாட்களில் 111 கோடியை பிடித்த தேர்தல் அதிகாரி கூட்டணி…

17 நாட்களில் ரூ.111 கோடியே 20 லட்சம் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தேர்தலின் போது முக்கியஸ்தர்களிடம் இருந்து பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் பறக்கும் படை செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.111 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரம் ரொக்கம் மற்றும் தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

Read more – உங்க குறைகளை கேட்க வரல… போக்க வந்துருக்கேன்… பிரச்சாரத்தில் பிளிறும் சீமான்

மேலும், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் செலவினங்கள் குறித்து தீவிரமாகக் கண்காணிக்கும்படியும், கடந்த நவம்பரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்படி, 21 லட்சத்து 38 ஆயிரம் புதிய வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version