வாக்காளர்கள் பணம் கேட்குறாங்க.. ஒரு 46 கோடி கடன் தாங்க .. வங்கிக்கு உத்தரவிட்ட சுயேட்சை வேட்பாளர்

நாமக்கல்லில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவேண்டும் என்று சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தனியார் வங்கியில் 46 கோடி கடன் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர். மேலும், தமிழக இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் 4, 141 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் ரமேஷ் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தற்போது, பகுதியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சென்ற ரமேஷ் வேட்பாளர் அந்த வங்கியின் மேலாளருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், விஜய் மல்லையா உள்ளிட்டோரின் 68 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை எஸ்.பி.ஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல் நாமக்கல் தொகுதியில் உள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யவேண்டும்.

அந்த வகையில் வாக்காளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக வழங்க நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமக்கு வெறும் 46 கோடி ரூபாய் மட்டும் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் எனவும் அதனை தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

Read more – இன்றைய ராசிபலன் 24.03.2021!!!

இதை படித்துப்பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர் இதுகுறித்து உயரதிகாரிகளிடம் பரிசீலனை செய்துவிட்டு உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், வங்கிக்கு மனு அளிக்க வந்த ரமேஷ் அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான கிரிக்கெட் பேட் மற்றும் ஹெல்மெட்டுடன் வந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version