ஆதார் அட்டை இருந்தால் சேப்பாக்கம் தொகுதியில் ரூபாய் 500.. வெளியான அதிமுகவிற்கு எதிரான வீடியோ ஆதாரம்…

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஆதார் அட்டையுடன் வரும் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம் வினியோகம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிமுக மற்றும் திமுக போன்ற முக்கிய கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறுகின்றனர். இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அதிகப்படியான வேட்புமனு தாக்கல் இன்று தமிழகத்தில் பதிவாகவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read more – வேணா தம்பி ராங்கு.. மக்கள் நீதி மய்யம் வேற மாதிரி கேங்கு.. கமல்ஹாசனின் பயமறியா பேச்சு..

இந்தநிலையில், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் ஜெ.எம்.பசீர் ஆதார் அட்டையுடன் வரும் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் வழங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேப்பாக்கம் தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version