தமிழகம் முழுவதும் போலீசாr ரவுடிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை :
சட்டமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் அதிகாரிகளுடன் தமிழகம் வந்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலையாமல் இருக்கவும், தேர்தல் நல்முறையில் நடைபெறவும் தமிழகம் முழுவதும் மிக முக்கிய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர்.
Read more – பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது : இன்று வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னையில் கடந்த சில நாட்களாகவே இந்த ரவுடிகள் வேட்டை தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் சிக்கிய நிலையில், அவர்களிடம் நன்னடத்தை சட்டபிரிவின் கீழ் உறுதிமொழி பத்திரத்திலும் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த பத்திரத்தை மீறி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இதுவரை தலைமறைவாக இருந்த 1200 குற்றவாளிகளை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.