234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்ய இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நாம் தமிழர் கட்சி ஒன்று மட்டும் இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வருகிறது.
இந்தநிலையில், வரும் மார்ச் 7 ம் தேதி ராயப்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். அதோடு அதே மேடையில், நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவை ஆவணமாக வெளியிடவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more – ஒழுங்கா படிக்கணும்… இல்லேன்னா உதைப்பேன்.. பிரச்சாரத்தில் பிரேமலதா பேச்சு…
தமிழக அரசியலில் 234 வேட்பாளர்களையும் ஒரே இடத்தில் நிறுத்த அறிமுகம் செய்த வரலாறு கிடையாது என்றும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நாற்பது தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளரை அறிமுகப்படுத்தினார். அதேபோல் இந்தமுறையும் திட்டமிட்டுள்ளார். ஆனால் 234 தொகுதி வேட்பாளர்களையும் எப்படி ஒரே மேடையில் நிறுத்தமுடியும். மேடை தாங்குமா ? என்ற ஐயமும் எழுந்துள்ளது.