சத்தமில்லாமல் அரங்கேறிய கூட்டணி… அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகளா ?

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவுடான கூட்டணியில் கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி அமைத்து இருந்தது. சட்டமன்றத் தேர்தலையொட்டி தொகுதிப்பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க உடன் தே.மு.தி.க 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்ததில் தே.மு.தி.க சார்பில் 41 தொகுதிகளைக் கேட்டதாகவும், அ.தி.மு.க 13 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவிப்பு வெளியானது.

Read more – கமல்ஹாசனின் கார் கண்ணாடி உடைப்பு : பிரச்சாரத்தில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

மேலும், தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் தகவல் கிடைத்தது. தொடர்ந்து அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் அமமுக-தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்த கூட்டணியில் 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடவுள்ளது.

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு :

Exit mobile version