ஆத்தூர் தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட இருந்த ஜீவா ஸ்டாலின்க்கு மாற்றாக சின்னதுரை போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தநிலையில், தி.மு.க சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கடந்த 12 ம் தேதி வெளியிட்டார்.
இந்தநிலையில் சேலம் ஆத்தூர் தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட இருந்த ஜீவா ஸ்டாலினை மாற்றி, அத்தொகுதியில் சின்னதுரை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமைக்கழகம் இன்று (மார்ச் 16 ) வெளியிட்ட அறிவிப்பில், “சேலம் கிழக்கு மாவட்டம், 82. ஆத்தூர் (தனி) தொகுதியில், திமுகவின் சார்பாகப் போட்டியிட, ஏற்கெனவே ஜீவா ஸ்டாலினின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு மாறாக, தற்போது, கு.சின்னதுரை பி.இ., ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
Read more – தமிழகத்தை ரோல் மாடலாக மாற்ற வேண்டுமா ? மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் : முதல்வர் பழனிசாமி
ஜீவா ஸ்டாலின் ஆதி திராவிடர் இல்லை என்ற சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து கு.சின்னதுரை பி.இ வாய்ப்பு வழங்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.