அதிமுக – பா.ஜ.க தொகுதி பங்கீடு : பா.ஜ.கவிற்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்

அதிமுக – பா.ஜ.க கூட்டணி தொகுதி பங்கீட்டின் உடன்பாடு இன்று மாலை அல்லது நாளை கையெழுத்தாகும் என தகவல் கிடைத்துள்ளது.

சென்னை :

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்த நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தங்களது ஆதரவு கட்சிக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அதிமுக – பா.ஜ.க குறித்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடந்தது.

Read more – கடலில் குதிப்பதும், மாணவிகள் முன்பு தண்டால் எடுப்பதும் தலைவருக்கு அழகா ? ராகுலை கிண்டலடித்த குஷ்பூ

இந்தநிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் கி‌ஷன் ரெட்டி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜகவின் தலைவர் முருகன் ஆகியோருடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் பாஜக 30 தொகுதிகள் கேட்டதாகவும், அதிமுக தரப்பில் 25 தொகுதிகள் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு பாஜக சம்மதம் தெரிவித்ததால் இன்று மாலை அல்லது நாளை அதிமுக – பா.ஜ.க கூட்டணி தொகுதி பங்கீட்டின் உடன்பாடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version