அதிமுக அரசு வீழ்ந்தே தீரும், அதனை வீழ்த்தும் கருவி மக்கள் நீதி மய்யம் : தமிழக அரசின் மீது கமல்ஹாசன் காட்டம்

விவசாயிகளை பாதுகாக்க இந்த அதிமுக அரசு வீழ்ந்தே தீரும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்:

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் கடந்த ஒரு மாத காலமாக சுழற்சி முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

Read more – சீனாவுக்கு எதிராக ஒத்த கருத்துக்களை கொண்ட நாடுகளை இணைக்க திட்டம் : ஜோ பைடன்

இந்தநிலையில் கமல்ஹாசன், தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பேசினார். அப்பொழுது அவர்,நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன். அதற்கு மக்களாகிய நீங்கள் அனைவரும் மக்கள் நீதி மய்யம் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், மக்களுக்காக பல புதிய திட்டங்களுடன் நாங்கள் சிறு நடை போட்டு வருகிறோம். அதனை வீரநடையாக மாற்றுவது நீங்கள்தான். எங்களது அரசியல் என்றும் பழி போடும் அரசியல் அல்ல, பழிவாங்கும் அரசியல் அல்ல, மக்கள் நீதி மய்யம் ஒரு வழிகாட்டும் அரசியல். விவசாயிகளையும், நெசவாளர்களையும், ஏழைகளை பாதுகாக்க இந்த அதிமுக அரசு வீழ்ந்தே தீரும். அதனை வீழ்த்தும் கருவியாக எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version