அரசியலுக்கு வந்ததால் தனக்கு 300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்தநிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது ; அரசியலுக்கு வந்ததால் தனக்கு 300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி எனக்கு கவலை இல்லை என்றும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் சிறு விளக்காக இருக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
Read more – வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீடு தற்காலிகம் தான் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மேலும், திமுக, அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி குறை சொல்லுகின்றனர். ஆனால் , இரு கட்சிகளும் தாங்கள் ஊழல் செய்யவில்லை என்று ஒருபோதும் கூறவில்லை. இந்த ஊழலுக்கு முடிவு கட்ட நீங்கள் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு அளித்து வெற்றிபெற செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.