மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையாவை அவரது வீட்டில் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை :
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு கட்டமாக நடைபெற நிலையில் ஆளும் அதிமுக கட்சி மற்றும் திமுக போன்ற முன்னணி கட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒரு வலிமையான கூட்டணியை அமைத்து வரும் தேர்தலில் வெற்றி பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பணியில் புதிதாக அரசியல் களத்தில் குதிக்கும் சகாயம் ஐஏஎஸ் மற்றும் ஆம் ஆத்மீ போன்ற கட்சிகளை தங்களுடன் கூட்டணி அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பழ. கருப்பையா சமீபகாலமாக தமிழகத்தில் திமுக – அதிமுக கட்சிக்கு எதிராக மாற்று அரசியல் வேண்டுமென்று மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
Read more – விஸ்வரூபம் எடுக்கிறாரா வீரப்பன் மகள்…. பென்னாகரம் தொகுதியில் போட்டி ?
நேற்று கமல்ஹாசன் பழ.கருப்பையாவின் வீட்டிற்கு சென்று கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியா என்று விரைவில் அறிவிக்கப்படும். 3 கட்ட பரப்புரை தயாராக இருப்பதாகவும், மய்யத்தின் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.