மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் பாதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு கூறியதாவது ;
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தை நாம் தான் முதலில் அறிவித்தோம். அதை என்னமோ புதிதாக கண்டுபிடித்ததுபோல் திமுக, அதிமுக ரூ.1,000, ரூ.1,500 என்று ஏலம் விடுகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாதி டாஸ்மாக் கடைகளை நாங்கள் மூடுவோம். மது குடிப்பதை விடமுடியாமல் தவிப்பவர்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே மறுவாழ்வு மையங்களை தொடங்கி அவர்களின் வாழ்வை மலர செய்வோம் என்று கூறினார்.
Read more – இன்றைய ராசிபலன் 18.03.2021!!!
மேலும், எங்களால் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும். அதையே அவர்கள் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை என்று கூறுகிறார்கள்.நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வீட்டுக்கு ஒரு கணினி கொடுப்பேன். அது இலவசம் அல்ல. முதலீடு அதுவே உங்கள் வாழ்வை மேம்படுத்தும் என்று பிரச்சரம் செய்தார்.