மக்கள் நீதி மய்யத்தில் மையமான பழ. கருப்பையா..

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ. கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்ததாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை :

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது பேசிய அவர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ. கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்ததாகவும், சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ.கருப்பையா போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more – கூட்டணி பற்றிய பேச்சு.. தேர்தலில் வெற்றிபெறுவதே எங்கள் முழுமூச்சு : சரத்குமார் கமலுக்கு வலைவீச்சு

மேலும், சட்டப் பஞ்சாயத்து இயக்கமும் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் என்றும், மார்ச் 1 ம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்றார். அதற்கான வேட்பாளர் பணியில் பொன்ராஜ், ரங்கராஜ், செந்தில் ஆறுமுகம், சுரேஷ் அய்யர் ஆகியோர் நேர்காணலை நடத்துவார்கள்.அதனை தொடர்ந்து, முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7 ம் தேதி வெளியாகும். மார்ச் 3 ம்தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version