ஹெலிகாப்டரில் பறந்து வந்து கமல் காட்டிய கெத்து… மக்கள் யாரும் இல்லாததால் பிரச்சாரக் கூட்டம் ரத்து..

பிரச்சாரத்திற்கு மக்கள் யாரும் வராததால் ஹெலிகாப்டரில் வந்த கமல்ஹாசன் பரப்புரை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.

உடுமலை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளில், பிரச்சாரம் மற்றும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைப்பதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.

அப்பொழுது, மடத்துக்குளம் பகுதிக்கு பிரச்சார செய்ய கமல் சென்றபோது பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் ஏமாற்றமடைந்து வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்ததோடு பிரச்சாரத்தை முடித்து கொண்டு உடுமலை சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. உடுமலை தொகுதியிலும் பிரச்சார கூட்டத்தில் பொதுமக்கள் குறைவாகவே இருந்தததால் கடுப்பான மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வேட்பாளரை அறிமுக செய்யாமலே கூட்டத்தை ரத்து செய்துவிட்டு கிளம்பிவிட்டார். இதனால் கமலை பார்ப்பதற்கு வந்த பொதுமக்கள் மற்றும் வேட்பாளர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Read more – அதிமுக கட்சியில் போட்டாங்க கேட் (டு)… சுயேட்சையாக களமிறங்குறார் ஓட்டு கேட்டு.. தோப்பு வெங்கடாசலம் தீடிர் முடிவு

ஜெயலலிதாவுக்கு பின் உடுமலை பகுதிக்கு ஹெலிகாப்டரில் பிரச்சாரத்துக்கு வந்தவர் கமல்ஹாசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version