கூட்டுறவு வங்கி கடன் சாத்தியமா ? சத்தியமாக முடியாது என்று மறுக்கும் கார்த்திக் சிதம்பரம்

கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி சாத்தியமா என்று தமிழக அரசுக்கு கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை :

தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் தொடர்ந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் எந்த கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற பரபரப்பான சூழ்நிலையும் நிலவி வருகிறது.

இந்தநிலையில், அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வாக்குறுதிகளை பிரச்சாரத்தில் அள்ளி தெளித்து வருகின்றனர். சமீபமாக அதிமுக தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Read more – உள்துறை அமைச்சருக்கு ஊதிய சங்கு…. சீக்கிரம் கோர்ட்ல ஆஜர் ஆகுங்க பங்கு…

இதுகுறித்து சிவகங்கை தொகுதி எம்.பி தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி சாத்தியமா? என்றும், விவசாயிகள் பெற்ற கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்கிறது அல்லது கடன் தொகையை அரசே செலுத்துகிறதா என்று விளக்கம் வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version