திமுக ஒதுக்கிய தொகுதிகள் போதுமானதாக இல்லை : சிபிஎம் தகவல்

சட்டமன்ற தேர்தலுக்காக திமுக ஒதுக்கீடு செய்த தொகுதிகள் போதுமானதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், திமுக சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனிதநேய மக்கள் கட்சி – 2, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 என மொத்தம் 17 இடங்கள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Read more – அப்பாவின் கனவை நிறைவேற்றுவேன் : கன்னியாகுமரி தொகுதியில் விருப்பமனு அளித்த விஜய் வசந்த் பேட்டி

மேலும், காங்கிரஸ், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு முடிவில்லாமல் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “திமுக அளித்த தொகுதிகள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து, அதிமுக – பாஜக கூட்டணி காயிலாங்கடை என்ஜின் மாதிரி. அது ஓடாது என்று கடுமையாக விமர்சனமும் செய்துள்ளார்.

Exit mobile version