தானாக தள்ளுபடியாகிறது நகைக்கடன்… மாறுகிறது மக்களின் மனம், இதுவே எடப்பாடியின் குணம்..

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்போது அனைத்து கூட்டுறவு வங்கிகளில் எளிய மக்கள் வாங்கியுள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

சென்னை :

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் முதல் அன்றாட பயன்படுத்தும் காய்கறிகள் வரை அதிமுக அரசு வழங்கியது. மேலும், ஆயிரம் ரூபாய் அவர்களது வீட்டுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.

இந்தநிலையில், சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்கவே அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்தார். அதில் மிக முக்கியமானதாக விவசாய பயிர்க்கடன் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை வைத்து பெற்ற நகைக் கடன்கள் தள்ளுபடி என்று அசத்தினார். இந்த அறிவிப்பு பலரையும் பாராட்ட செய்தது.

Read more – அரசியலை விரட்டிய சசிகலா, துடித்துப்போன டிடிவி..அமமுக நிலைமை என்ன ?

ஏற்கனவே, விவசாய பயிர்க்கடனுக்கான தள்ளுபடி ரசீதுகள் வழங்கப்பட்டு வரும் வேளையில், தற்போது ஏழை எளிய மக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் பணிகளை கூட்டுறவுத்துறை தொடங்கியுள்ளது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக தான் ஆட்சியமைக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் இருப்பதாகவும் அறியப்படுகிறது.

Exit mobile version