வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீடு தற்காலிகமானது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்தநிலையில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீண்டும் அந்த தொகுதியில் வெற்றிபெற தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது ;
Read more – வாக்காளர்கள் பணம் கேட்குறாங்க.. ஒரு 46 கோடி கடன் தாங்க .. வங்கிக்கு உத்தரவிட்ட சுயேட்சை வேட்பாளர்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது 6 மாத காலத்திற்கு தற்காலிகமான ஒன்று. தற்காலிக மசோதவாக நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்தார்.