விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அவரது மகள்கள் பிரச்சாரம் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விராலிமலை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்தநிலையில், விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அவரது மகள்கள் அனன்யா மற்றும் ரிதன்யா பிரச்சாரம் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்பொழுது பேசிய விஜயபாஸ்கரின் இளைய மகள் அனன்யா கூறியதாவது; நான் விஜயபாஸ்கரோட ரெண்டாவது பொண்ணு. எல்லாருக்கும் வணக்கம். எங்க அப்பா தினமும் இரவும் பகலும் உங்களுக்காகத்தான் உழைக்கிறாரு. ஏதாச்சும் உங்களுக்கு ஆகிருச்சுன்னா துடிச்சிப்போயிடுவாரு. உங்களுக்கு காது கேக்கலைன்னா காது மெஷினா வருவாரு. கண்ணு தெரியலைன்னா கண்ணாடியா வருவாரு. கஜா புயல்னா கரன்ட்டா வருவாரு. கொரோனான்னா மருந்தா, மாத்திரையா வருவாரு. பொங்கல்னா சீரா, சிறப்பா வருவாரு என்று தெரிவித்தார்.
Read more – மேற்குவங்கம், அசாமில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு…
மேலும், தீபாவளி பொங்கலுக்கு கூட எங்க கூட கொண்டாடாமல் உங்கள் நலனுக்காகவே போராடினாரு . உங்க வீடு பிள்ளையா நினச்சு அவர ஜெயிக்கவைங்க என்று மழலை மொழியில் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 2016 தேர்தலிலும் தனது 8 வயது ரிதன்யா பிரியதர்ஷினியை பிரசாரத்துக்கு அழைத்து வந்து வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.