திருச்சியில் வரும் 7 ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் 10 ஆண்டுக்கான தொலைநோக்கு செயல்திட்டத்தை அறிவிக்க இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை :
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின் கூறியதாவது ; எனது பிறந்தநாளில் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றி. தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் ஆட்சி மாற்றம் நடைபெறவுள்ளது, அதுவும் திமுகவினால் மட்டுமே நிகழும் என்று தெரிவித்தார்.
வரும் 7ந்தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில், 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு செயல்திட்டத்தை அறிவிக்க உள்ளேன் .மேலும் நேற்று முதல் திமுக கூட்டணி தொகுதி உடன்பாடு பேச்சு தொடங்கி உள்ளது அதனை தொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
Read more – திமுக கூட்டணியில் யார் யார் ? மதிமுக, விசிகவுடன் இன்று பேச்சுவார்த்தை
அமித்ஷா போன்ற பாஜக தலைவர்களின் பேச்சுகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றும் திமுக தான் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.