அதிமுக, திமுக பின்னால் ஏன் எல்லாரும் செல்ல வேண்டும் ? கூட்டணி ஆட்சி குறித்து கிருஷ்ணசாமி கருத்து

அதிமுக, திமுக பின்னால் ஏன் எல்லாரும் செல்ல வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை :

அதிமுக, திமுக பின்னால் ஏன் எல்லாரும் செல்ல வேண்டும், அதற்கு மாறாக கூட்டணி ஆட்சி அமைக்கலாமே என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், தமிழகத்திற்கு விடிவுகாலத்தை உருவாக்கித் தர முடியுமா, மாற்று சிந்தனையாளர்களை, முற்போக்கு சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

Read more – இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான போராட்ட வழக்குகள் : உடனடியாக ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவிப்பு

மேலும், மாற்றம் என்ற விடியலை நோக்கி இவர்கள் பயணிப்பார்களா? தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என்ற சிந்தனை எனக்குள் இருக்கிறது. அதற்காக தான் நான் உழைத்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version