திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் எங்கள் ஒரே இலக்கு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தேசிய கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தங்களது ஆதரவு கட்சிக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பிரச்சாரத்திற்காக சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக மற்றும் அமமுக இணைப்பு குறித்து பேசியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து, சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : அதிமுக- அமமுக இணைப்பு என்பது தற்போது யூகம் மட்டுமே. அதற்கு என்னால் விளக்கம் அளிக்க முடியாது. ஆனால் அமமுக தலைமையில் நிச்சயம் கூட்டணி அமையும் என்று தெரிவித்தார்.
Read more – உடல் நோய்த் தடுப்பூசி இன்று.. ஊழல் நோய்க்கு அடுத்த மாதம்.. ஆளும் நோய்க்கு எதிராக ஊசி செலுத்திய கமல்
மேலும், எங்களுடைய ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான். விரைவில் அமமுக என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்பது குறித்து ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.