திமுகவிற்கு ஆதரவாக காடுவெட்டி மகள் பிரச்சாரம்… பரப்புரை வாகனத்தை மறித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்..

வந்தவாசியில் திமுகவிற்கு ஆதரவாக காடுவெட்டி மகள் பிரச்சாரம் மேற்கொண்ட வாகனத்தை பாமகவினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசி :

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மரணத்திற்கு பாமக நிறுவனர் மற்றும் இளைஞரணி தலைவர் தான் காரணம் என்று காடுவெட்டி குரு மகள் விருந்தாம்பிகை மற்றும் மகன் கனலரசன் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரமும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காடுவெட்டியின் மனைவி சொர்ணலதா இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Read more – தாயை இழிவாக பேசியவர்கள் யாராக இருந்தாலும் கடவுள் தண்டிப்பார்… பிரச்சாரத்தில் கண்கலங்கிய எடப்பாடி பழனிசாமி…

இந்தநிலையில், வந்தவாசி (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அம்பேத்குமாருக்கு ஆதரவாக காடுவெட்டி மகள் விருந்தாம்பிகை நேற்று பிரச்சாரம் மேற்கொண்டபோது, எனது தந்தையை 48 நாட்கள் மயக்க ஊசி போட்டு  கொலை செய்துவிட்டதாகவும், அவர் மருத்துவமனையில் இருந்த போது எங்களது குடும்பத்தையும் பார்க்கவிடாமல் செய்து விட்டனர் என்றும் குற்றம் சாட்டினார். அப்பொழுது பாமகவினர் சிலர் அவர் பரப்புரை மேற்கொண்ட வாகனத்தை தடுத்து நிறுத்தி கோஷங்களை எழுப்பினர், தொடர்ந்து பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்தனர். தகவல் தெரிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பாமகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி சமாதானம் செய்தனர்.

Exit mobile version