வாக்காளர்களுக்கு விநியோகித்து வந்த மோடி புகைப்படத்துடன் கூடிய தங்க நாணயம் மற்றும் லட்ச கணக்கான பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
காரைக்கால் :
தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் நேற்று இரவு 7 மணியுடன் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர். கடைசி நாள் பிரச்சாரம் என்பதால் மக்களை கவர அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் பாஜக சார்பில் ஜி.என்.எஸ். ராஜசேகரன் களமிறங்குகிறார். அவருக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் சீட்டு கிடைக்காத முன்னாள் அமைச்சர் சிவா சுயேட்சையாக களமிறங்குகிறார்.
Read more – தந்தை கமலுக்காக சாலையில் வெறித்தனமாய் நடனமாடிய அக்சரா ஹாசன்.. வைரலாகும் வீடியோ…
மும்முனையில் கடுமையான போட்டி என்பதால் அந்த தொகுதியில் அனல் பறக்கிறது. இந்தநிலையில், பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு பாஜக வேட்பாளரான ஜி.என்.எஸ். ராஜசேகரன் மற்றும் மோடி புகைப்படம் அடங்கிய கவரில் தங்க காயின், இரண்டாயிரம் பணம் என முப்பதாயிரம் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இதனையறிந்த மாற்றுக்கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பறக்கும் படையினருக்கு அளித்த தகவலின் பெயரில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த 96 ஆயிரம் பணத்தையும், 149 தங்க காயினையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.