ஜெயலலிதாவுக்கு இருந்த பொறுமையும், பெருமையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடான கூட்டணியில் தேமுதிக கட்சி விலகி வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் அமமுக-தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது.
மேலும், 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது; தேமுதிக – அமமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழக அரசியலில் சரித்திரம் படைக்கும். தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்க காலதாமதம் ஆகியது. தேமுதிகவை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் தான் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. அதிமுக கூட்டணியில் சுமூகமாக செல்ல வேண்டும் என்பதால் மிகமிக பொறுமையாக, பக்குவமாக இருந்தோம்.
Read more – சட்டமன்ற தேர்தலையொட்டி ஏப்ரல் 6 ம் தேதி ஊதியத்துடன் விடுப்பு : தொழிலாளர் ஆணையர் அறிவிப்பு
ஆனால், தேமுதிகவிற்கு 13 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என அதிமுக பிடிவாதமாக இருந்தது. எனவே, 18 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டோம். விரும்பும் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள் என்று எடப்பாடி கூறியதால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகினோம். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன் தான் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.