தேர்தல் நிதியாக ரூ.102.93 கோடி ஒதுக்கீடு : துணை முதல்வர் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்காக ரூ.102.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை :

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு கட்டமாக நடைபெற நிலையில் ஆளும் அதிமுக கட்சி மற்றும் திமுக போன்ற முன்னணி கட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பரபரப்பான இந்த அரசியல் சூழலில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு ரூ.102.93 கோடி தேவைப்படுகிறது என்று தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் நிதியானது பொதுத்துறையின் மானிய கோரிக்கை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

Read more – மக்கள் நீதி மய்யத்தில் மையமான பழ. கருப்பையா..

மேலும், இதற்கான இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.21,172.82 கோடி நிதியை ஒதுக்க தமிழக அரசு வழிவகை செய்கிறது அதனால் இந்த நிதிக்கான தொகையை செலவழிக்க மாமன்றம் அனுமதிக்க வேண்டுகிறேன் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version