உங்க குறைகளை கேட்க வரல… போக்க வந்துருக்கேன்… பிரச்சாரத்தில் பிளிறும் சீமான்

உங்கள் குறைகளை வெறும் வார்த்தையால் கேட்காமல் அதை சரி செய்ய வந்திருக்கேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை :

தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் அடுத்தடுத்து தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்கள் மனதை கவர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது ;

திருவொற்றியூர் தொகுதியில் தான் மக்கள் அதிக பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்து அதில் போட்டியிடுகிறேன். எனது சொந்த தொகுதியான காரைக்குடியில் என்னால் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்க முடியும். ஆனால் நான் அப்படி விரும்பவில்லை.

Read more – இன்றைய ராசிபலன் 16.03.2021!!!

திருவொற்றியூர் தொகுதியில் காணப்படும் பிரச்சனைகளை நான் கேட்கவில்லை. அதில் உள்ள குறைகளை தீர்ப்பதற்க்காகவே வந்துள்ளேன். எனக்கு திருவொற்றியூர் தொகுதியில் மக்களிடமிருந்து அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் நான் இந்த தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version