தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் முதலமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்வார் : தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் முதலமைச்சர் தான் தமிழகத்தை ஆட்சி செய்வார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் :

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான அதிமுகவுடன் இணைந்து பா.ஜனதா தேர்தலை சந்திக்கிறது

இந்நிலையில் வேலூர் மாவட்டம் ராணிபேட்டையில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் வேட்பாளரே தமிழத்தில் ஆட்சி செய்வார் என்று தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு எதிரான நடக்கும் குற்றங்களுக்கு பா.ஜனதா ஆட்சியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Read more – ‘கோலமாவு கோகிலா’ இந்தி ரீமேக்கில் நயன்தாராவாக ஸ்ரீதேவி மகள்

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பிறகும், பா.ஜனதா தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்கும் முதல்வர் தான் தமிழகத்தை ஆட்சி செய்வார் என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version