ஓட்டுக்காக வேல் எடுப்பவர்களுக்கு வேல் கைகொடுக்காது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை :
மதுரையில் த.மா.கா.- அ.தி.மு.க. கூட்டணி குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது : த.மா.கா.- அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கின்றது. அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் அதிக அளவிலான வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த வளர்ச்சி பணிகளை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களில் இல்லாத அளவிற்கு வளர்ச்சி பணிகள் தமிழகத்தில் உள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் அவசியமான ஒன்றாக உள்ளது என்றார். மேலும், அவசரமாக மீனவர்கள் பிரச்சினைகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், பெட்ரொல், டீசல், கேஸ் விலை உயர்வை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் ஓட்டுக்காக வேல் எடுப்பவர்களுக்கு வேல் கைகொடுக்காது. அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து சமூகமாகப் பேசி நல் முடிவை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.