ஸ்டாலின் முதல்வராக வேண்டி கைவிரலை துண்டித்த திமுக தொண்டர் முத்திப்போன மூடத்தனத்தின் உச்சமாக நிகழ்ந்துள்ளது.
வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இன்றோடு அரசியல் கட்சியினர் தங்களது பரப்புரையை முடித்துகொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் இன்று மாலை 7 மணியுடன் பரப்புரை நிறைவு செய்யப்படுகிறது.
அடிமட்ட தொண்டர்கள் பலர் பச்சை குத்துவதிலும் அவர்களைப்போல ஆடைகளை அணிவதிலும் ஆசைபடுவார்கள். ஆனால் மூடத்தனத்தை உச்சமாக கை விரலை துண்டித்து இருக்கிறார்.
Read more : பாலிவுட்டில் ரீமேக்காக்கும் மாஸ்டர் படத்திற்காக காத்திருக்கும் முன்னணி நடிகர் சல்மான் கான்…!!
இந்நிலையில் சிவகாசியை சேர்ந்த குருவைய்யா என்பவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அதை நிறைவேற்றும் பொருட்டு சாத்தூர் இருக்கன்குடி கோவிலில் சென்று, தனது கையின் கட்ட விரலை துண்டித்துகொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.