சென்னையில் இன்று முதல் வரும் ஏப்ரல் 1 ம் தேதி வரை தபால் ஓட்டுகள் பெறும் முறை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை :
கொரோனா பரவல் காரணமாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நேரடியாக வாக்குப்பதிவு செய்ய முடியாதவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. அதன்படி, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்று திறனாளிகள் உள்பட தமிழகத்தில் 2,44,000 விண்ணப்பம் செய்திருந்தனர்.
அதேபோல், சென்னையில் மட்டும் சுமார் 12,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 7,300 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்தநிலையில், சென்னையில் 70 குழுக்கள் அமைக்கப்பட்டு, நாளொன்றுக்கு 15 வாக்குகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு குழுவின் வீதம் வாக்குப்பதிவு ஊழியர்கள் 3 பேர், நுண் பார்வையாளர், காவலர், வீடியோ ஒளிப்பதிவாளர் இடம் பெற்றுள்ளனர். தபால் ஓட்டு பதிவு செய்தவர்களுக்கு செல்போன்கள் மூலம் முன்கூட்டியே மெசேஜ் அனுப்பப்பட்டு அதிகாரிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Read more – 15 மாதங்களுக்கு பிறகு வங்கதேசத்திற்கு பயணித்த பிரதமர் மோடி…
சென்னையில் இன்று முதல் வரும் ஏப்ரல் 1 ம் தேதி வரை தபால் ஓட்டுகள் பெறும் முறை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.