இன்று வெளியாகும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று உறுதி செய்ய இருக்கிறது.

புதுடெல்லி :

தமிழக சட்டபேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தை போல கேரள, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் போன்ற சட்டபேரவையின் பதவிக்காலமும் முடிவடைய இருக்கிறது.

இந்தநிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு ஏற்கனவே தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலும் நேரில் சென்று ஆய்வு நடத்தியது. அந்தந்த மாநிலத்திற்கான தேர்தல் பணிகள் குறித்தும் தேர்தல் அட்டவணை குறித்தும் இன்று சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

Read more – இன்றைய ராசிபலன் 24.02.2021!!!

காலை 11 மணிக்கு டெல்லியில் தொடங்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் கொரோனா தொற்று பரவாமல் தேர்தல் நல்ல முறையில் நடத்துவது எப்படி, எந்தந்த மாநிலங்களில் எத்தனை கட்டமாக தேர்தலை நடத்துதல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுதல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு இன்று 5 மாநில தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version