தேர்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி பொதுவிடுமுறை – தமிழக அரசு அரசாணை வெளியீடு

தேர்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி பொதுவிடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை : 

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் ஒரேகட்டமாக வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் மற்றும் பிரசாரப் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அனைவரும் வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 6ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 135 பி அடிப்படையில் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அனைவருக்கும் வாக்களிக்க ஏதுவாக தினக்கூலி, தற்காலிகம், ஒப்பந்தம் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் நாளன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டுமென்று தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version