பிரதமரின் வருகைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு… ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackModi

தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #GoBackModi என்னும் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

திருப்பூர் :

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெற இன்னும் சரியாக ஒருவார காலமே இருப்பதால் மத்தியில் உள்ள தேசிய கட்சிகளின் முக்கிய ஆளுமைகளான அமித் ஷா, ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மற்றும் ராகுல் காந்தி போன்றோர் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Read more – இன்றைய ராசிபலன் 30.03.2021!!!

இந்நிலையில் பிரதமர் மோடி திருப்பூர், தாராபுரம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

https://twitter.com/offl_trollmafia/status/1376703366013804549?s=20
Exit mobile version