கையில டார்ச் இருக்கு… பீஸ் எங்க… மக்கள் நீதி மய்ய வேட்பாளரின் மறந்து போன மொமண்ட்…

மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யவந்த போது கட்டணத்திற்கான பணத்தை மறந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரவாயல் :

தமிழகத்தில் வருமாம் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து
கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி , கடந்த 12 ம் தேதி தொடங்கி 19 ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின்  சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மாநிலச்செயலாளரும், மதுரவாயல் தொகுதி வேட்பாளர்  பத்மபிரியா தனது ஆதரவாளர்களுடன் கட்சி சின்னமான டார்ச்  லைட்டை கையில் ஏந்தி பிரச்சாரம் செய்துகொண்டு தேர்தல் அலுவலர் இளங்கோவனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Read more – இன்றைய ராசிபலன் 17.03.2021!!!

அப்பொழுது, வேட்புமனு தாக்கல் செய்யு வந்த பத்மபிரியா டெபாசீட் பணமான 10 ஆயிரத்தை மறந்து வைத்து விட்டு, கையில் டார்ச் லைட்டுடன் வந்துள்ளார். அதன்பிறகு அவரது உதவியாளர் பணத்தை கொண்டு வந்து தர மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version