திமுக தலைவர் முக ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை :
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற 3 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வெற்றி பெரும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பண பட்டுவாடாவை தடுப்பதற்காக காவல் துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் மற்றும் உடைமைகளை கைப்பற்றி வருகின்றனர்.
Read more – கடையில் கல் வீசியது சிறு சம்பவம்.. அதை ஊதி எங்களை வம்பிழுக்க வேண்டாம்.. வானதி ஸ்ரீனிவாசன் பதில்
இந்தநிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை- மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் ஐடி சோதனை நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, திமுக வேட்பாளர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.