சட்டமன்ற தேர்தலையொட்டி ஏப்ரல் 6 ம் தேதி ஊதியத்துடன் விடுப்பு : தொழிலாளர் ஆணையர் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6 ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அனைத்து பணியாளர்களுக்கும் ஏப்ரல் 6 ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் ஆணையர் அறிவித்துள்ளார்.

Read more – செய்யாறு தொகுதியில் வேட்பாளரை மாற்று…. இல்லையெனில் போய்டுவ தோற்று…. போஸ்டர் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்த தொண்டர்கள்

மேலும், 1951ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 1358 ன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பிடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான ஏப்ரல் 6 (செவ்வாய்) அன்று அவர்கள் வாக்களிக்க எதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version