திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10 ம் தேதி வெளியிடப்படும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் மார்ச் 10 ம் தேதி வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக கட்சி விருப்பமனு அளித்த நபர்களிடம் நேர்காணல் நடத்தியது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் அதன் தொடர்ச்சியாக திருச்சியில் 7 ம்தேதி நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்பொழுது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;

Read more – சென்று வா மகனே, வென்று வா… மகன் பிரபாகரனை ஆசிர்வதித்த விஜயகாந்த்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வருகிற 10 ம் தேதி வெளியிடப்படும் என்றும், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தொண்டர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version