அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் : யார் யார் எந்த தொகுதியில் போட்டி ?

சட்டமன்ற தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை :

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அமுமக தலைமை கழகத்தில் கடந்த 3 ம் தேதிமுதல் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வந்தது. விருப்ப மனு வழங்கியவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் கடந்த 8 மற்றும் 9 ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.

Read more – நான் ஒரு பிராமண பெண், எனக்கு இந்து தர்மத்தை சொல்லிக்கொடுக்காதீர்கள் : பாஜகவை எதிர்த்து சீறிப்பாய்ந்த மம்தா

அதன் அடிப்படையில் 15 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் :-

ராசிபுரம்(தனி) – அன்பழகன்
பாபநாசம் – பெ.ரெங்கசாமி
பாப்பிரெட்டிபட்டி – பி.பழனியப்பன்
சைதாப்பேட்டை – செந்தமிழன்
சோளிங்கர் – என்.ஜி.பார்த்திபன்
வீரபாண்டி – எஸ்.கே.செல்வம்
அரூர் – ஆர்.ஆர்.முருகன்
பொள்ளாச்சி – கே.சுகுமார்
புவனகிரி – கே.எஸ்.கே.பாலமுருகன்
ஸ்ரீரங்கம் – ஆர். மனோகரன்
மடத்துக்குளம் – சி.சண்முகவேலு
திருப்பத்தூர் (சிவகங்கை) – கே.கே.உமாதேவன்
உசிலம்பட்டி – ஐ.மகேந்திரன்
கோவை தெற்கு – துரைசாமி(எ) சாலஞ்சர் துரை
தருமபுரி – டி.கே.ராஜேந்திரன்

மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version